Wednesday, November 19, 2014

பொருளும் அமசங்களும் சார்ந்த வழிமுறைகாண் சிக்கல் தீர்வு இயம்பல்




Object Oriented Aspect Oriented Procedure Oriented Cross cutting Concerns
Driven Script ::::
புறநானூறு ::: 142
புலவர்:: பரணர்
மன்னவன்:: கோப்பெரும் பேகன்
"அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரிபோல்,
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது
படை மடம் படான் பிறர் படைமயக் குறினே !"
பொருள்கள் (Objects):: குளம், வயல், உவர்நிலம்
குளம் எனும் இடம், நீர் எல்லா காலங்களிலும் அதிக அளவில் தங்கி வற்றும் தன்மையது. குளத்தில் பயிர் வளராது.ஆயினும் குளம் வேண்டும் (Attributes)
வயல் எனும் இடம் , நீர் தேவைப்படும் போது மட்டும் தங்கி வற்றும்
தன்மையது. வயலில் பயிர் வளர வயலும் குளமும் வேண்டும் (Attributes)
உவர்நிலம் எனும் இடம், நீர் தங்கியும் தங்காமலும் காய்ந்தும் காய்ந்து போகாமலும் இருக்கும் களர் நிலம் தன்மையது.களர் நிலத்தில் பயிர் வளராது. ஆயினும் நிலத்தடி நீரால் புழுக்கள் பெருகி அவற்றால் பயிர் வளர ஏதுவாகும்(Attributes)
அறு, அகல், உதவா என்னும் சொற்களும் மிக அருமையாக
தங்க, அகன்ற,உதவாத என்னும் பொருளில் சேர்ந்துள்ளது
வினைகள் :: உகுக்க , பொழிய, ஊட்ட (Procedures)
உகுத்தல் என்ற வினை, பெரிது என்னும் அளவினை குறித்து (Aspect) சொல்லப்படும் தமிழ் சொல் .
பொழிதல் என்ற வினையும், கொஞ்சம் குறைவு என்னும் அளவினைக் குறித்து (Aspect)சொல்லப்பட்டது
ஊட்டல் என்ற வினை, சிறிதே என்னும் அளவினைக் குறித்துச்
(Aspect)சொல்லப்பட்டது
வரையா மரபின் என்று சொல்லுங்கால், எல்லையில்லா ஈகை எனும் பொருளில் (Aspect)சொல்லப்பட்டது .
கொடையில் எளிமை ஆயினும் படையில் வன்மை அவன் ..அதுவே மடம் என்ற சொல்லில் படுதல், படான் என நின்றது (Cross cutting Concerns).
மொத்தத்தில் பொருள் சார்ந்து அதன் தன்மை சார்ந்து அதன் வினையும் சார்ந்து ஒருவரின் இரு வேறுபட்ட தனமைகளை
குறிப்பால் உணர்த்தும் இப்பாடல்....
மாதிரிகளும் சரிபார்ப்பும்
***********************************
மாதிரி (Model) சரிபார்ப்பு (Checking) என்பது  ஒரு வன்பொருள்(Hardware) அல்லது
மென்பொருள் (Software) அமைவின் (System)  மாதிரியானது, தனக்குப் பொருந்தக்கூடிய
நிலையற்ற (Temporal) தருக்க (Logic) சுருக்கவிதிமுறை( Formula) களால்
குறிப்பிடப்பட்ட முறைசார்ந்த (Formal) அதன் குறியீடுகளை (Specification)
நிறை (Satisfy) செய்கிறதா அல்லது  இல்லையா என சரிபார்ப்பதே ஆகும்.
அந்த சுருக்க விதிமுறைகளானது ,
ஒருமுக நேர்காலத் தருக்கமாகவோ (Linear Time Logic)  அல்லது
பன்முக கணனிபடர் தருக்கமாகவோ (Computational Tree Logic) அமையப் பெறலாம்.
இது போன்ற மாதிரிகள், உருபெறப் போகும் ஒரு அமைவின் இயங்குநிலை நடத்தைகளை  அகப்படுத்தி வெளிப்படுத்தும் அமைப்பு ஆகும்.
பொதுவாக இவற்றை " க்ரிப்கே"( Kripke)  உருஅமைப்பு( Structure) எனச் சொல்வார்கள்.
ஒருமுக நேர்காலத் தருக்கம் (Linear Time Logic) :
***************************************************************
இந்த வழியைப் பின்பற்றி வரும் சுருக்கவிதிமுறை (Formulas) களை  
       "ஒ"   எனக் கொள்வோமேயானால்,
அந்த "ஒ" விதிமுறைகளை ஏற்பு இல்லா மறுப்பு (Non-Negated) படிவம் (Form) தாங்கி
பின்வருமாறு வெளிப்படையாகத் தெரிவிக்கலாம் .
            "ஒ" = உண்மை ( true) | பொய் (false) | எனவும்
              அடிப்படைக்கூற்று (proposition) கூ | எனவும்
மறுக்கப்பட்ட கூற்று (negated proposition) ம கூ | குறிக்கப்படலாம்.

இரு வெவ்வேறு விதிமுறைகளின் குறுக்கீட்டுச் சந்திப்பு (Intersection of two different formulas) :                கூ1 குறுக்கு கூ2     ஆகியவையாகவோ, மேலும்
          "ஒ" = அடுத்த (Next) எனும் வினைக்குறி (Operator) |
                 = இறுதியாக (Eventually) எனும் வினைக்குறி
                 = எப்போதும் (Always)எனும் வினைக்குறி |
                 = வரையிலும் ( Until) எனும் வினைக்குறி |
                  = கட்டவிழ்ப்பு ( Release )எனும் வினைக்குறி
                   = நலிந்த வரையிலும் ( Weak Until) எனும் வினைக்குறி

என்பனவற்றை,
அ"ஒ" | இ"ஒ" | எ"ஒ" | வ"ஒ" | க "ஒ" | ந "ஒ"      எனவும்  குறிப்பிட இயலும்..